Suganthini Ratnam / 2010 நவம்பர் 08 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நவம்)
யாழ்ப்பாணம், கண்டி வீதியில் பயணித்த விறகு லொறியொன்று வீதியின் கரையோரத்திலிருந்த கிடங்கில் புதையுண்டு போயுள்ளது.
பொலன்னறுவையிலிருந்து விறகு ஏற்றிக்கொண்டு வந்த லொறி, எதிரே வந்த வாகனத்திற்காக வழிவிட்டபோதே வீதியோரத்தில் புதையுண்டது.
ஏற்கனவே இந்தப் பகுதியில் தொலைபேசி இணைப்புகளைப் பொருத்துவதற்காக கிடங்குகள் வெட்டப்பட்டதாகவும் இந்தக் கிடங்குகள் மூடப்பட்டபோதிலும் தற்போது பெய்து வரும் மழையால் கிடங்கில் போட்ட மண் இறங்கியுள்ளமையினாலும் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமையாக காணப்பட்டதால் பொதுமக்களினதும் மாணவர்களினதும் போக்குவரத்தும் மற்றும் வாகனங்களின் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டமையால்; பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
.jpg)
55 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
8 hours ago