Suganthini Ratnam / 2010 நவம்பர் 09 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். பொதுநூலகத்தை உல்லாசப் பயணிகள் பார்வையிடுவதற்கு சில நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாநகரசபை உறுப்பினர் தெரிவித்தார்.
யாழ். நகரசபையின் நூலக ஆலோசனைக்குழுவின் கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை மாலை யாழ.; மாநகரசபை மேயர் திருமதி பற்குணராஜா யோகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, பொதுநூலகத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதாயின் 25, 25 பேராக அனுமதி வழங்கப்பட்டு அவர்கள் 15 நிமிடத்தின் பின்னர் வெளியேற வேண்டும் எனவும் அதன் பின்னர் அடுத்த 25 பேர் செல்வதற்கு அனுமதிப்பதெனவும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் சுற்றுலாப் பயணிகள் நூலகத்தினுள் செல்லும்போது கைத்தொலைபேசி, வீடியோ, புகைப்படக் கருவிகள் கெண்டுசெல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், கைப்பை மற்றும் பிரயாணப் பொதிகளை கொண்டு செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் நூலகத்தைப் பார்வையிடும்போது வாசகர்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லாது பார்த்துக்கொள்வதற்கு நூலக நிர்வாகம் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
40 minute ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
9 hours ago
05 Nov 2025