2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

யாழ். அரச அதிபருக்கு இராணுவப் பாதுகாப்பு

Super User   / 2010 நவம்பர் 11 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், தனக்கு இனந்தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரின் வாசஸ்தலத்திற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் தான் அளித்த சாட்சியம் தொடர்பாகவே மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களிலிருந்து வந்த அழைப்பின் மூலமே இம்மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் இன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இராணுவ உயரதிகாரிகளுக்கு தான் அறிவித்துள்ளதாக கூறிய அவர், தனது பாதுகாப்புக்காக இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை நியமிக்குமாறு தான்  கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 


  Comments - 0

 • ajanth Thursday, 11 November 2010 10:17 PM

  கதிரை ஆசைக்காக இனத்தை விலை பேசி விற்கும் துரோகிகள். பதவியில்

  Reply : 0       0

  Dharshan Friday, 12 November 2010 03:04 AM

  தமிழர்கள் என்றால் கண்மூடித்தனமாக புலிகளை ஆதரித்து பொய் பேச வேண்டும் என்று இருக்கிறதா அஜந்த்? யாழ் அரச அதிபர் கூறியதில் என்ன தவறு என்று சொல்லுங்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--