2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

நெல்லியடியில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் விளக்கமறியலில்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 12 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

வடமராட்சி, நெல்லியடி பகுதியில் அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட சைக்கிள்கள் திருட்டுப்போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவர் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்குள் நெல்லியடி நகரப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட சைக்கிள்கள் திருட்டுப்போயுள்ளன.  இச்சம்பவங்கள் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் நடத்திய விசாரணையின்போது, சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.  

கைதுசெய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை நீதவான் திருமதி ஜோய் மகிழ்மகாதேவா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, மூன்று சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .