Suganthini Ratnam / 2010 நவம்பர் 12 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் கவிதைக்கான ஹமறுபாதிஹ காலாண்டிதழின் முதலாண்டுச் சிறப்பிதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வெளியிடப்படவுள்ளது.
இந்த மொழிபெயர்ப்புச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு யாழ் நாவலர் மண்டபத்தில் அ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
மொழிபெயர்ப்புக் கவிதைகள்இ மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொடர்பான கட்டுரைகள்இ மொழிபெயர்ப்பு முயற்சிகளைப் பற்றிய பேராசிரியர் சி. சிவசேகரத்தின் நேர்காணல்இ மொழிபெயர்ப்பு அனுபவங்கள் பற்றிய பகிர்வுகள் மற்றும் கவிதைகள் பற்றிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் எனப் பல விடயங்களைக் கொண்டமைந்ததாக இந்த மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் அமைந்திருக்கிறது.
இந்த வெளியீட்டு விழாவில் கலைமுகம் இதழின் ஆசிரியர் திரு. செல்மர் எமில் வெளியீட்டுரையையும் எழுத்தாளர் ஐ.சாந்தன் ஆய்வுரையையும் கவிதை இதழின் ஆசிரியர் சித்தாந்தன் பதிலுரையையும் நிகழ்த்தவுள்ளனர்.
இந்த அரங்கில் புத்தகக் கூடத்தின் நூல் காட்சியும் நடைபெறுகிறது. இந்த நூல் காட்சியும் விற்பனையும் 13ஆம் 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
11 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago