2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

குறிகட்டுவான் - நெடுந்தீவுக்கான படகின் நிர்மாணப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 12 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குறிகட்டுவான் - நெடுந்தீவு பயணிகளின் போக்குவரத்திற்கென நிர்மாணிக்கப்பட்டு வரும் படகினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்று வெள்ளிக்கிழமை சென்று பார்வையிட்டார்.

குறிகட்டுவான் - நெடுந்தீவு பயணிகளின் போக்குவரத்திற்காக படகு தேவைப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  கவனத்திற்கு ஏற்கெனவே கொண்டுவந்திருந்தார்.

இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் இப்படகு கொழும்பு துறைமுகத்தில் டொக்யார்ட் நிறுவனத்தினால்  8 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இப்படகின் நிர்மாணப் பணிகள் பாதி பூர்த்தியான நிலையில், மீதி வேலைகள் கூடிய விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இலவசப் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள இப்படகு சேவை மூலம், குறிகட்டுவான் - நெடுந்தீவுக்கிடையிலான பயணிகள் பயனடைவார்களென்று எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--