2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

சொந்தக் கிராமங்களில் குடியேற அனுமதியுங்கள்: நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கோரிக்கை

Super User   / 2010 நவம்பர் 13 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் இன்னமும் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமலுள்ள தங்களது சொந்தக் கிராமங்களான வெற்றிலைக்கேணி, போக்கறுப்பு, கட்டைக்காடு, சுண்டிக்குளம் ஆகிய கிராமங்களில் மீளக்குடியேற அனுமதிக்குமாறு அக்கிராமங்களைச் சேர்ந்த அல்லாரை நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள பெண்கள் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இன்று வேண்டுகோள் விடுத்தனர்.


யாழ். குடத்தனையில் இன்று நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழு விசாரணையின்போதே அவர்கள் இவ்வேண்டுகோளை விடுத்தனர்.


மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அல்லாரை நலன்புரி நிலையத்திலும் மற்றும் பல்வேறு பகுதிகளிலுள்ள உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் தங்கியிருந்து சிரமங்களை அனுபவிப்பதாகவும் தாம் நிம்மதியாக வாழ்வதற்கு சொந்தக்கிராமங்களில் மீளக்குடியேற ஒழுங்குகளைச் செய்து தாருங்கள் என அவர்கள் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கோரினர்.


அதற்கு பதிலளித்த ஆணைக்குழுவினர் ,யாழ். அரச அதிபருடன் இது தொடர்பாக பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--