2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

நாடக போட்டியில் யாழ். பல்கலை மாணவி தேசிய ரீதியில் முதலிடம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 14 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தேசிய ரீதியிலான நாடக எழுத்துருவாக்கல் போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் பீடத்தின் 3ஆம் வருட மாணவி ஜி.தமிழரசி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பெர்னாடீன் ஞாபகார்த்தமாக தேசிய ரீதியில், பொரளை நாமல் பாமினி புஞ்சி தியேட்டரில் நடத்தப்பட்ட நாடக எழுத்துருவாக்கல் போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி தமிழரசியின் நாடகமும் பங்குபற்றியது.

'நியதிகள் மாறுவதில்லை' எனும் தலைப்பில் முதியவள் ஒருவரின் தனிமையும் அதன் வலியும் குழந்தைகள் மூலம் அத்தனிமை எவ்வாறு போக்கப்படுகின்றது என்பது பற்றி சித்திரிக்கப்பட்ட தமிழரசியின் நாடகம் முதலிடத்தைத் தட்டிச்சென்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .