Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 15 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். போதனா வைத்தியசாலை சுத்திகரிப்புப் பணியாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க இன்று திங்கட்கிழமை கைவிடப்பட்டுள்ளது.
நேற்றுக் காலை முதல் தனியார் நிறுவன சுகாதாரப் பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், வைத்தியசாலையின் சுத்திகரிப்புப் பணிகள் இடம்பெறாது அங்கு சுகாதாரச் சீர்கேடு நிலவியதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை யாழ். வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புளோர் கெயார் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சுத்திகரிப்பு ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
வைத்தியசாலையின் சுத்தம் பிரதானமாக இருப்பதனால் போராட்டத்தை கைவிட்டு; வழமை போன்று பணிகளில் ஈடுபடுமாறு சுத்திகரிப்பு பணியாளர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வு காணப்படுமென்று அமைச்சர் தெரிவித்ததைத் தொடர்ந்து சுத்திகரிப்புப் பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு தமது வழமையான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் மீது நேற்று இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் காயமடைந்தவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டுள்ள அதேவேளை, அண்மையில் அளவெட்டியில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞரையும் அமைச்சர் பார்வையிட்டார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago