2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வடகடல் தொழிலாளர்களுக்கு இந்தியா நிதியுதவி

A.P.Mathan   / 2010 நவம்பர் 17 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

சீனோர் நிறுவனத்திற்கு இயந்திர கொள்வனவுக்காக இந்திய அரசு 156 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிவஞானஜோதி தெரிவித்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்படி தெரிவித்தார்.

இந்திய அரசாங்கம் வழங்குகின்ற 156 மில்லியன் ரூபாயினைக் கொண்டு புதிதாக நூல் திரிக்கும் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் இதன்மூலம் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற வடகடல் தொழிலாளர்களுக்கு வலைகளை பின்னிக் கொடுக்க முடியும் எனவும் சிவஞானஜோதி மேலும் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .