Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடமாகாண பாடசாலை விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு தேசிய விளையாட்டுப் பயிற்சியாளர்கள் மூலம் அதிவிசேட பயிற்சி முகாமொன்றை நடத்துவதற்கு வடமாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் முயற்சியினால் இப்பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரு வாரங்களுக்கு தொடர்ச்சியாக மல்லாவியில் நடைபெறவுள்ள இப்பயிற்சி முகாமில், வடமாகாணத்திலுள்ள 500 பாடசாலை விளையாட்டு வீர வீராங்கனைகளுக்குப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி முகாம் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக வடமாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக வடமாகாண பாடசாலை வீர வீராங்கனைகளுக்கு தேசிய மட்டத்திலான பயிற்சி வழங்கப்படவுள்ளது. சராசரியாக ஒரு பாடசாலையில் இருந்து இரு வீரர்கள் இப்பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .