Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்டப் பாடசாலைகள் பலவற்றில் மூன்றாம் தவணைப் பரீட்சையில் குறிப்பி;ட்ட புள்ளிகளுக்கு மேல் பெறாத மாணவர்களுக்கு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை வழங்காததால், பெற்றோர்களும் மாணவர்களும் பாடசாலைகளுக்கு அலைக்கழியவேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர்.
பாடசாலை நிர்வாகம் தாம் நூறுவீத அடைவு மட்டத்தை அடைந்ததாக காட்டுவதற்காக, மூன்றாம் தவணைப் பரீட்சையில் குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றுவதற்;ககான அனுமதி அட்டைகளை வழங்காதுள்ளனர்.
பாடசாலை அதிபர்களின் இத்தகைய செயற்பாடுகள் காரணமாக பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மாணவர்களின் நிலைமை பற்றி தமக்கு அறியத்தராமலும் உரிய நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடாமலும் எழுந்தமானமாக இருந்துவிட்டு இறுதிப் பரீட்சைக்குச்செல்லும் நிலையில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், அவர்கள் மனவிரக்திக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
11 minute ago
17 minute ago
18 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
18 minute ago
19 minute ago