Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.மாவட்டத்தில் பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடக்கூடிய 13 குறுகிய கால தொழில் பயிற்சிகளை இலங்கைத் தொழில் பயிற்சி அதிகாரசபை வழங்கவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களைக் தொழில் பயிற்சி அதிகாரசபை கோரியுள்ளது.
இப் பயிற்சி நெறியானது கணினி மென்பொருள், கணினி வன்பொருள், மோட்டார் சைக்கிள் திருத்துதல், முச்சக்கரவண்டி திருத்துதல், ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை, வெல்டிங், கட்டிட நிர்மாணம், மரவேலைப் பொறியியல், வீட்டு மின் இணைப்பு, அலுமினிய பொருத்துகை, வெளியிணைப்பு, இயந்திரம் திருத்துகை, நீர்க்குழாய் பொருத்துதல் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படவுள்ளன.
பயிற்சிகளில் இணைந்து கொள்ளவிரும்புபவர்கள் தமது விண்ணப்பத்தை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபை, இல- 375, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுள்ளனர்.
இப்பயிற்சி நெறிகள் சாவகச்சேரி, காரைநகர், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சங்கானை, தீவகம், தெல்லிப்பழை ஆகிய பகுதிகளில் நடத்தப்படவுள்ளன.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago