2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

முச்சக்கர வாகனம் துவிச்சக்கர வண்டி விபத்து

Super User   / 2010 டிசெம்பர் 13 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

முச்சக்கர வாகனம் துவிச்சக்கரவண்டி மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான குடும்பஸ்தரொருவர் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றிரவு 7.30 மணிக்கு இடம்பெற்றது.

இது குறித்து தெரிய வருவதாவது,

வல்வெட்டித்துறை ஊரிக் காட்டிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு அல்வாயிலுள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவேளை இரும்பு மதவடி பகுதியில் அதி வேகமாக வந்த முச்சக்கர வாகனமும் துவிச்சக்கர வண்டியுடன் மோதிய விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த அல்வாய் தெற்கைச் சேர்ந்த செல்லக்கிளி தேவக்குமரன் (வயது 48) என்ற குடும்பஸ்தர் தலையிலும் நெஞ்சுப் பகுதியிலும் பலத்த காயமடைந்துள்ளார்.

முச்சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .