2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

யாழ். வைத்தியசாலைக்கு குறுந்தூர கதிர்வீச்சு சிகிச்சை பிரிவு அமைப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு நான்கு கோடி ரூபா செலவிலான குறுந்தூர கதிர்வீச்சுச் சிகிச்சைப்பிரிவொன்று அமைக்கப்படவுள்ளது.

சர்வதேச அணுசக்தி அதிகாரசபை இலங்கை அரசு ஆகியவற்றின் உதவியுடன் இப்பிரிவு அமைக்கப்படவிருப்பதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சர்வதேச அணுசக்தி அதிகாரசபையினதும் இலங்கை அரசின் நிதிப் பங்களிப்புடனும் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது தெல்லிப்பழை புற்றுநோயாளர் சிகிச்சைப் பிரிவில் நெடுந்தூர கதிர்வீச்சு சிகிச்சைப்பிரிவு மட்டுமே செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--