2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

யாழில் இரு இறங்குதுறைகள் திறப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். காக்கைத்தீவு மற்றும் நாவாந்துறை பகுதிகளில் இரு இறங்குதுறைகள் இன்று காலை ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயப் பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, இயற்கை மற்றும் யுத்த அழிவுகளால் சேதமாகிய இவ்இறங்குதுறைகள் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு இன்று மக்கள் பாவனைக்கு விடப்படுவதை சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள் இவற்றை சரியாகப் பராமரித்து பயன்படுத்துவதுதான் முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

குறித்த இறங்கு துறைகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு உதவிய ஜய்க்கா நிறுவனம் பல்வேறு வழிகளில் எமது மக்களுக்கு உதவி வருவதை உணர்த்திய அமைச்சர், வேலணை பகுதியில் கடல் தாவர செய்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் குருநகர் மற்றும் மண்டைதீவு பகுதிகளில் கடல் அட்டை வளர்ப்பினை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் மேற்படி நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் இதன் மூலம் எமது மக்கள் உயரிய பயனை அடைய முடியுமென்றும் தெரிவித்தார்.

ஜய்க்கா நிறுவனம் கடல்தொழில் சார்ந்த கல்லூரி ஒன்றையும் மீளக் கட்டியெழுப்ப உள்ளதையும் சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதன் மூலம் கடல்தொழில் சார்ந்த புதிய தொழில் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் கற்று இத்தொழிலை முன்னேற்ற முடியும் என்பதையும் உணர்த்தினார்.

யாழ். அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன், ஜய்க்கா நிறுவனப் பிரதிநிதிகள், உதவி அரச அதிபர்கள், யாழ் மாநகர முதல்வர், பிரதி முதல்வர், யாழ் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல், கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--