2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

யாழ்., கிளிநொச்சியில் புதிய நீர்விநியோகத் திட்டம்

Super User   / 2010 டிசெம்பர் 20 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிய நீர் விநியோக திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக, யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டங்கள் 2 ஆயிரத்து 70 மில்லியன் பெறுமதியானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..
பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டம், எதிர்வரும் 2015ம் ஆண்டு நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான நிதியை இலங்கை அரசாங்கமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஒதுக்கியுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தின் விளைவாக, யாழ்ப்பாணம், கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, நாவட்குழி, நல்லூர், கோப்பாய், கரவெட்டி, சங்கானை சண்டிலிப்பாய், காரைநகர், அச்சுவேலி, ஆவரங்கால், பருத்தித்துறை, பலாலி, வல்வெட்டித்துறை, மருதங்கேனி பகுதிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தையும் சேர்ந்த மக்கள் பயனடைவர் என தெரிவிக்கப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--