A.P.Mathan / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
யாழ். நகரப் பகுதிக்கு இன்று திடீர் விஜயம் மேற்கொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள பல்வேறு பகுதிகளையும் கடைத் தொகுதிகளையும் பார்வையிட்டார்.
நகரின் மையப் பகுதியில் அமையப்பெற்றுள்ள வைரவர் கோயிலுக்குச் சென்ற அமைச்சர், கோயில் சுற்றாடலையும் அங்குள்ள மலசல கூடத்தையும் பார்வையிட்டார்.
துவிச்சக்கர வண்டித் தரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு ஏற்றவிதத்தில் கோயிலுக்கு அண்மையான பகுதியை ஒழுங்காக கம்பி வேலியடைத்து அதற்கு கதவையும் போட்டு அப்பகுதி வர்த்தகர்களின் ஒத்துழைப்புடன் பாதுகாவலருக்கு சம்பளம் வழங்கும்படியும் இச்செயற்பாட்டை உடனடியாக ஆரம்பிக்கும்படியும் உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
தொடர்ந்து பெரியகடை வீதியிலுள்ள பல்வேறு கடைத்தொகுதிகளுக்குச்சென்ற அமைச்சர், உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன், கழிவுநீர் வாய்க்கால்களையும் பார்வையிட்டார்.
இதேபோன்று புதிய சந்தைப் பகுதி, பவர்ஹவுஸ் வீதி கடைத் தொகுதிகளையும் பார்வையிட்டதன் பின்னர் புதிதாக அமைக்கப்படவுள்ள பாற்சாலைக்கான இடத்தையும் பார்வையிட்டார்.
அத்துடன் நவீனமுறைக் கட்டிடத் தொகுதி அமைக்கும் பட்சத்தில் அந்த வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடக்கூடியதாக ஸ்ரான்லி வீதியில் பிரத்தியேக இடம்கொடுக்கக் கூடிய வசதிகளையும் இதன்போது அமைச்சர் ஆராய்ந்தார்.
அமைச்சருடன் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் மாநகரசபை துறைசார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)

17 minute ago
22 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
3 hours ago
5 hours ago