Menaka Mookandi / 2011 ஜனவரி 12 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த காலங்களில் இடம்பெயர்ந்துள்ள நிலையில் தேர்தல் இடாப்பில் பெயர் பதியப்படாமலும் பதிவு தவறவிடப்பட்ட நிலையிலும் காணப்படும் தமது பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வயாவிளான் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சின் பணிமனைக்கு வருகை தந்த வயாவிளான் மக்கள் பிரதிநிதிகளே மேற்கண்ட கோரிக்கையினை விடுத்தனர்.
ஜே 245 கிராம அலுவலர் பிரிவினைச் சொந்த இடமாகக் கொண்ட இப்பிரதேச மக்கள் இடம்பெர்ந்த நிலையில் பல வருடங்களாக பல்வேறு இடங்களிலும் வசித்து வருவதாக தெரிவித்த இப்பிரதிநிதிகள் கடந்த வாக்காளர் இடாப்பு பதிவின் போது உரிய தகவல்கள் கிடைக்காமல் பதிவினை புதுப்பிக்க பலர் தவறியுள்ளதாகவும் மேலும் புதிதாக வாக்காளர் பதிவில் இணைத்துக்கொள்ள அடுத்த ஓர் தலைமுறை உருவாகியுள்ளதாகவும் தெரியப்படுத்தினர்.
இவ்வாறாக தேர்தல் இடாப்பில் பெயர் பதியப்படாத நிலையில் சுமார் 800 பேர் உள்ளதாகவும் எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு வாக்காளர் இடாப்பில் பதிவினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
மேற்படி வேண்டுகோள் தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோருடன் உடனடியாக தொடர்புகொண்டு நடவடிக்கை மேற்கொண்டார்.
இதன்பிரகாரம் எதிர்வரும் 19ஆம் திகதி வயாவிளான் மகாவித்தியாலயத்தில் ஓர் நடமாடும் சேவையினை மேற்கொண்டு தவறவிடப்பட்ட மற்றும் பதியப்படாத வாக்காளர்களின் பதிவினை மேற்கொள்வதென முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
36 minute ago
50 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
50 minute ago
54 minute ago