2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாணத்தில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 13 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கும் முகமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவாகள் தமது விரிவுரைகளை இடைநிறுத்தி இன்று யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் உதவிப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

காலையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவுகளுக்கு அமைவாக இந்நடவடிக்கை மாணவ மன்றத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து குடாநாட்டின் வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணம் எனப் பிரிந்து இந்தப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--