2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

யாழ். முன்பள்ளி அபிவிருத்தியை வளர்க்க அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவ வேண்டும்: வடமாகாண ஆளுநர்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்திலுள்ள முன்பள்ளி அபிவிருத்தியை வளர்த்தெடுப்பதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள்; முன்வருவதுடன், கல்விச் செயற்பாடுகளிலும்; அரசசார்பற்ற நிறுவனங்கள் சிறார்களுக்கு பங்களிப்பு செய்ய வேண்டுமென வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

வடமாகாண முன்பள்ளிகளுக்கான முகாமைத்துவ திட்டமிடல் பற்றிய கலந்தாய்வரங்கு இன்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் 12 பிரதேசங்களில் மொத்தமாக 1,435 முன்பள்ளிகள் தற்போது இயங்கி வருகின்றன. இதில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 193 முன்பள்ளிகள் இயங்கி வருகின்றன.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த வடமாகாண முன்பள்ளிகள் தொடர்பான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது மாத்திரமன்றி யாழ். மாவட்டத்தில் நீண்டகாலத்திற்கு பின்னர் முன்பள்ளி சிறார்களின் கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்பள்ளித் திட்டங்கள் நீண்டகாலத்தின் பின்னர் மேற்கொள்ளப்படுவதால் ஆரம்பத்தில் குறைபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

முன்பள்ளி கற்கைநெறியானது மாணவர்களுக்கு அத்தியாவசியமானதொன்றாகும். ஓர் கட்டிடத்திற்கு அத்திவாரம் எவ்வாறு பலமானதாகவும் முக்கியமானதாகவும் இருக்க வேண்டுமோ அதுபோன்றே முன்பருவக் கல்வியாகும்; என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--