Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
A.P.Mathan / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயாரின் சடலம் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அஸ்தியைச் சேதப்படுத்தியதற்காக யாழ். மாநகரசபையின் பொதுக்கூட்டத்தில் தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இக் கண்டனம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில்...
'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் திருமதி வே.பார்வதிபிள்ளை அமரத்துவமடைந்த செய்தி மீண்டும் ஒருமுறை நம் தமிழ் இனத்தை ஆறாத் துயரில் ஆழ்த்திச் சென்றுள்ளது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் வல்வெட்டித்துறை இந்து மயானத்தில் நடைபெற்று தகனம் செய்த பின்பு, அஸ்தியை சேதப்படுத்தியதுடன் நாய்களைச் சுட்டுக் கொன்று அதனுள்போட்டு அதனைச் சேதப்படுத்தியுள்ளனர். இது உலகில் உள்ள தமிழ் இனத்தை அவமதித்த செயலாகும். கேவலமான இழிவான இச்செயலைப் புரிந்தவர்களை கடுமையாக கண்டிக்கிறேன்..' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் கே.விந்தன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago