2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

யாழில் நாளை மின் தடை

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை மின்சார விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் சுண்ணாகம், மின் பொறியியலாளர் அலுவலகத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார மார்க்கங்களின் கட்டமைப்பு பணிகள் காரணமாக இந்த தடை அமுல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் படி நாளை சனிக்கிழமை  முற்பகல் 9 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையில், இந்த மின்சார விநியோகத் தடை அமுலில் இருக்கும்.

புன்னாலைக்கட்டுவான், அச்செழு, அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சி ஆகிய பிரதேசங்களில் இந்த மின்சாரத் தடை அமுலாகவுள்ளது.

இதேவேளை புத்தூர், வாதராவத்தை, வீரவாணி, ஆவரங்கால், ஊறணி, நெல்லண்டை, தும்பளை, கற்கோவளம், புனிதநகர், உபயகதிர்காமம், வல்லிபுரம், வடமராடசி கிழக்கு ஆகிய இடங்களில், முற்பகல் 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் மின்சார தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--