Menaka Mookandi / 2011 மார்ச் 01 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இந்திய மீனவர்களால் கடந்த மாதம் சிறை பிடிக்கப்பட்ட நான்கு யாழ். குருநகர் மீனவர்கள் இதுவரையில் விடுதலை செய்யப்படாமைக்கு ஆட்சேபனை தெரிவித்து குருநகர் கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் தினங்களில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் தூதரத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக குருநகர் கடற்றொழில் அபிவிருத்திச் சங்கதலைவர் இ.பிறேமன் தெரிவித்துள்ளார்.
அத்துமீறி யாழ். குடா கடற்பரப்பிற்குள் வந்த இந்தியமீனவர்கள் 136 பேர் இரண்டு நாட்களுக்குள் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். ஆனால் யாழ்ப்பாண மீனவர்கள் இரண்டு வாரங்களாகியும் விடுதலை செய்யப்படவில்லை.
இவர்களது குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர்க்கொண்டுள்ளதாகவும் குருநகர் மீனவர்களுடைய விடுதைலையை இந்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று கோரியுமே தாம் உண்ணவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
6 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
06 Nov 2025