2025 ஜூலை 05, சனிக்கிழமை

யாழ். சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள் மூவர் கைது

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். சிறைச்சாலையைச் சேர்ந்த கைதிகள் மூவர் இன்று அதிகாலை 3 மணியளவில் தப்பிச்சென்றபோது, சிவில் உடையணிந்த பொலிஸாரால் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ். சிறைச்சாலையைச் சேர்ந்த கைதிகள் மூவர்  இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தப்பிச்சென்றுள்ளனர்.  இந்த நிலையில், தப்பிச்சென்ற கைதிகளை  கைதுசெய்யும் முகமாக யாழ். பொலிஸாரின் உதவியை யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் நாடியிருந்தனர்.

இதனையடுத்து  இன்று அதிகாலை வேளையில்  யாழ். நகரப் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட  பொலிஸார்,  மேற்படி கைதிகள் மூவரும் தப்பிச் செல்வதற்காக யாழ். பஸ் நிலையத்தில் காத்திருந்தபோது, கைதுசெய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.

இவர்கள் மூவரும் கடும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களென யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .