2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

வடமராட்சி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமராட்சிபிரதேசசெயலகஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி காலை 9 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் வடமராட்சிப் பிரதேசத்தை சேந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் மற்றும் வடமராட்சி பிரதேசத்திலுள்ள சகல அரச திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இக்கூட்டத்தில் வடமராட்சி பிரதேச அபிவிருத்தியை மையமாக் கொண்டு செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .