2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

வேலணை வங்கியில் கொள்ளை முயற்சி தோல்வி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 09 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். வேலணைப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்க  வங்கியொன்றில் இடம்பெற்ற கொள்ளை முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வங்கியை நேற்று புதன்கிழமை மாலை 5.50 மணியளவில் மூடிவிட்டுச் சென்ற பின் இன்று காலை வந்து பார்த்தபோது வங்கிக் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், வங்கியிலிருந்த சைக்கிள் மாத்திரம் திருடிச்செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .