2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

வடமராட்சி கிழக்கின் மூன்று கிராம அலுவலகர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 12 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமராட்சி கிழக்கிலுள்ள மூன்று கிராம அலுவலகர் பிரிவுகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெறவிருந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வெற்றிலைக்கேணி, முள்ளியான், போக்கறுப்பு ஆகிய கிராம அலுவலகர் பிரிவுகளில் அரை நிரந்தரமான 10 வீடுகளை பொதுமக்களுக்காக இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர்.

இந்த வீடுகள் அமைக்கும் பணி இன்னமும் முடிவடையாத நிலையிலுள்ளது. இதனால் மேற்படி கிராம அலுவலகர் பிரிவுக்களுக்கான மீள்குடியேற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .