Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜூன் 14 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வலி. வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களின் வாழ்விடங்களையும் அம்மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் 'வடக்கின் வசந்தம்' செயற்திட்டத்தின் கீழ் உட்கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ எதிர்வரும் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வலி. வடக்கில் மீளக்குடியமந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டுமானப் பணிகள் நேற்று செவ்வாய்கிழமை ஆரம்பித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைகள் படிப்படியாக அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ், மீளக்குடியமர்ந்தவர்களுக்கு அவர்களின் வாழ்வியல் உரிமையுடன் அவர்களை மீளக்குடியமர்த்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
11 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
9 hours ago