2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

யாழ். மாநகரசபையின் ஏற்பாட்டில் டெங்கொழிப்பு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 16 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

'டெங்குவை கட்டுப்படுத்த நாம் ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் யாழ். மாநகரசபையின் பிரதான நீர்வழங்கல் பிரதேசமாகிய கோண்டாவில் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை டெங்கு கட்டுப்படுத்தும் செயற்பாடும் சிரமதான பணிகளும் நடைபெற்றுள்ளதாக யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது

இதில் அனைத்து மாநகரசபை நீர்வேலைப்பகுதி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு டெங்கொழிப்பு பணியில் ஈடுபட்டனர்
இப்பணியில் தொழிலாளர்களுடன் தொழிலாளர்களாக முதல்வரின் செயலாளர் கு.பற்குணராசா, நீர்வேலைப்பகுதி பொறியியலாளர் கெண்டர்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .