Super User / 2011 ஜூன் 18 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் யாழில் முழு வீச்சில் நடைபெறும் எனவும் எந்த சக்திகளுக்கும் தாம் ஒரு போதும் அடிபணியப் போவதில்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
வேட்பாளர் அறிமுக நிகழ்வும் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.
'தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக நாம் எந்த வன்முறைகளையும் சந்திக்க தயாராக இருக்கின்றோம். எமது கட்சி யாழில் உள்ளுராட்சி தேர்தலில் முழு ஆசனங்களையும் கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது' என அவர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தாத்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
இந்த தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற மண்டபத்தின் வெளியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
56 minute ago
14 Nov 2025
senthooran Sunday, 19 June 2011 10:52 PM
ஐயோ, புல்லரிக்கிறது !!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
14 Nov 2025