2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரின் குருத்துவ வெள்ளி விழா நன்றித் திருப்பலி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 20 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தைச் சேர்ந்தவரும் பிஷப் சவுந்தரம் மீடியா சென்ரர் இயக்குனரும் யாழ். பல்கலைக்கழக ஊடக வழங்கல் பயிற்சி நிலைய விரிவுரையாளருமான அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரின் குருத்துவ வெள்ளி விழா நன்றித் திருப்பலி சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் யாழ்.  மறைமாவட்டக் குரு முதல்வர் அருட் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், நற்கருணை நாதர் சபையின் குருக்கள் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.

அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார் 1986ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு யாழ்.  மரியன்னை பேராலயத்தில் உதவிப் பங்குத்தந்தையாகவும் மண்டைதீவு, கரம்பன், அரியாலை, சுண்டுக்குளி ஆகிய இடங்களில் பங்குத்தந்தையாகவும் கத்தோலிக்க அச்சகத்தின் அதிபராகவும் பாதுகாவலன் ஆசிரியராகவும் சமூகத்தொடர்பு ஆணைக்குழுவின் இயக்குநராகவும் இருந்துள்ளார். அத்துடன், யாழ். பல்கலைக்கழக ஊடக வழங்கல் பயிற்சி நிலைய இணைப்பாளர் மற்றும் விரிவுரையாளராகவும் கடமையாற்றுகின்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .