Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 20 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
காரைநகர் - ஊர்காவற்றுறை படகுப்பாதை சீரின்மையால் அரசாங்க ஊழியர்களும் பொதுமக்களும்; பாடசாலை மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 7.30 மணிக்குப் புறப்படும் படகுச்சேவையைத் தவறவிட்டால் மீண்டும் பலமணி நேரம் காத்திருந்தே பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் தாம் அலுவலகங்களுக்கு தாமதமாகிச் செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக அரசாங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையம், பாடசாலைகள், நீதிமன்றம் மற்றும் அரசாங்கத் திணைக்களங்கள் ஊர்காவற்றுறையில் காணப்படுகின்றது. இவைகளுக்கு கடமைகளுக்காகச் செல்லும் காரைநகர் மக்கள் இப்படகுப்பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர். படகுச்சேவையின் நேரம் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதினால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்வதாக அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய வேளையில் இப்படகுச்சேவை நடைபெறுவதில்லையென்பதுடன், சம்மந்தப்பட்ட தரப்பினர் இதனைக் கவனத்திற்கொள்வதில்லையெனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
51 minute ago
55 minute ago