Kogilavani / 2011 செப்டெம்பர் 26 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் கைதியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஏழு பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இவர்கள் அனைவரும் நாளை மறுதினம் புதன்கிழமை யாழ்.நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் என். கே. இளங்கக்கோனின் பணிப்புரையின் பேரிலேயே இவர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப் பட்டிருப்பதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 2 பொலிஸ் சார்ஜன்களும், 5 பொலிஸ் கான்ஸ்டபிள்களுமே இவ்வாறு சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காகக் கொண்டுவரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டத்தரணிகள் முன்னிலையில் பொலிஸாரால் தாக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் கடந்த 20 ஆம் திகதி முதல் தமது பணிகளைப் பகிஷ்கரித்து வந்தனர்.
எதிர்காலத்தில் நீதிமன்றத்தினை அவமதிக்கக் கூடிய இவ்வாறான செயல்கள் நடைபெறாது என்ற உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் தமது பகிஷ்கரிப்புத் தொடருமென அவர்கள் அறிவித்தனர்.
பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளான சந்தேக நபரை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்குமாறு பணிப்புரை விடுத்த நீதிபதி ஆனந்தராசா, இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்டிருந்தார். இந்த நிலையிலேயே இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago