2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் பொலிஸ் நிலையம் அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் பொலிஸ் நிலையம் கட்டுவதற்குரிய  காணியைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு வலி. தெற்கு பிரதேச செயலக ஒருங்கினைப்புக்குழுக் கூட்டத்தில் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வலி. தெற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பொலிஸ் நிலையம் அமைப்பதற்கான நிதி காணப்படுகின்றபோதிலும்,  அரசாங்கக் காணி இல்லாமையால் பொலிஸ் நிலையத்தை அமைக்க  முடியாதுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார குறிப்பிட்டார்.

இதனை ஆராய்ந்த ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், பொலிஸ் நிலையம் கட்டுவதற்கான காணியை கொள்வனவு செய்யவோ அல்லது  சுவீகரிப்பதற்கான  நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளருக்கு பணித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .