2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

யாழில் சிரமதான மூலமான சுத்திகரிப்பு தினம்

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில் உள்ள சகல அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பொது இடங்கள், வீடுகள், வர்த்தக நிலையங்களில் சிரமதானம் மூலமான சுத்திகரிப்பு தினமாகப் நாளை செவ்வாய்கிழமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.

அனைத்து இடங்களினதும் உரிமையாளர்களோ அல்லது பராமரிப்பாளர்களோ அன்றைய தினத்தில் தமது சுற்றாடலை சிரமதான முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.

இதனை அந்தந்தப் பகுதிக்குரிய பொது சுகாதாரப் பரிசோதகர்கள், மேற்பார்வைப் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் கண்காணிக்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--