Super User / 2011 ஒக்டோபர் 10 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வல்லிபுரத்தாள்வார் கோயில் திருவிழாவிற்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக வந்த தூக்குக்காவடி தடம் புரண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கள் கிழமை காலை ஒரு தூக்குக் காவடியில் 3 சகோதரர்கள் ஒன்றாக தெங்கியபடி வந்தவேளை மந்திகை முறாவில் பகுதியில் உள்ள வீதி வளைவில் தூக்குக்காவடி திரும்பும் போது உழவு இயந்திரம் குடைசாய்ந்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் ஒருவர் தலையிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மூவர் உடல் முழுவதும் பரத்த காயம் ஏற்பட்ட நிலையில் நேர்த்திக் கடனைமுடிப்பதற்காக நடைபயணம் மூலம் வல்லிபுரக் கோயிலைச் சென்றடைந்துள்ளனர்.
40 minute ago
56 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
56 minute ago
3 hours ago
5 hours ago