2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கோம்பயன் மணல் மயானத்தின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

பாரம்பரியப் பெருமை பெற்ற கோம்பயன் மணல் மயானத்தின் நிர்வாகத்தை யாழ் மாநகர சபையிடம் மேற்படி மயான அறக்காவலர்கள் கையளித்ததை தொடர்ந்து அம்மயான அபிவிருத்தியில் யாழ் மாநகரசபை செயற்பட்டு வருகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக மேற்படி மயானத்தின் தற்போதய அமைப்பு முறைக்கு குந்தகம் ஏற்படாமல் மயானத்தில் சில நவீன அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

அம்மயானத்தில் மக்கள் பாவனைக்கான மண்டபம், மின்சார தகனக்கூடம், சுற்றுமதில் முதலியவற்றை அமைக்கும் பணியின் முதற்கட்டமாக அம்மயானத்தை இன்று செவ்வாய்கிழமை காலை மாநகர சபை பொறியியலாளர் ,மாநகர சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மயானத்தின் அறக்காவலர் குழுவினருடன் சேர்ந்து பார்வையிட்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .