2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளராக மீண்டும் கணேசபிள்ளை நியமனம்

Super User   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளராக இம்மாதம் 19 ஆம் திகதியிலிருந்து ஓய்வுபெற்ற பிரதேச முகாமையாளர் க.கணேசபிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் பணிப்பின் பேரில் இலங்கைப் போக்குவரத்து சபைத் தலைவர் பந்த சேனாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம்  பிரதேச முகாமையாளர் கே.கணேசபிள்ளை ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து பதில் பிரதேச முகாமையராக கே.கேதீசன் நியமிக்கப்பட்டுக் கடமையாற்றி வந்தார்.

அண்மையில் பிரதேச முகாமையாளருக்கான நேர்முகத் தேர்வில் கேதீசன் தோற்றியிருந்த போதும்; நேர்முகப் பரீட்சையில் தெரிவாகாத காரணத்தினால் கணேசப்பிள்ளை  நியமிக்கப்பட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--