2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

'கடவுள்களுக்கே பாதுகாப்பு இல்லாத அசாதாரண சூழல்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது'

Super User   / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடா நாட்டில் கடவுள்களுக்கே பாதுகாப்பு இல்லாத அசாதாரண சூழல்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச இந்து குருமார் ஒன்றிய தலைவர் சபா வாசுதேவ குருக்கள் தெரிவித்தார்.

இந்து ஆலயங்களில் இந்து மத விக்கிரகங்கள் களவாடப்படுவது தொடர்பாகவும் இந்து ஆலயங்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும் இன்று சனிக்கிழமை யாழ். நாக விகாரையில் சர்வமத குருக்களினால் ஆராயப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் இந்து ஆலயங்களில் பல இலட்சம் பெறுமதியான விக்கிரகங்கள் களவாடப்பட்டு தென் பகுதியில் விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் தங்கத்திலான முலஸ்தான விக்கிரகங்கள் எல்லாம் ஆலயங்களில் கள்ளர்களினால் களவாடப்பட்டு வருகிறன.

சபா வாசுதேவ குருக்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிலையை மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் இல்லாதுவிட்டால் மக்களுக்கு மதங்கள் மீது நம்பிக்கை இல்லாது போய்விடும். கோயில் சாமிக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவுகிறதாகவும் தெரிவித்துள்ள அவர்

மக்கள் மத்தியில் இது ஒரு பாரிய பிரச்சனையாக உள்ளது. எனவே உடனடியாக இந்து ஆலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--