2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

நிரந்தர நியமனம் கோரி யாழ். தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 24 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தங்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை இன்று வியாழக்கிழமை நடத்தினர்.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ். மாவட்ட  தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் குறித்து வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தாமல் கலைந்து செல்லுமாறு கூறியதாகவும்  யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

எது நடந்தாலும் தங்களது போராட்டம் அமைதியான முறையில் தொடருமென யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .