2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

யாழின் சில பகுதிகளில் மின்தடை

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                      (எஸ்.கே.பிரசாத்)
வீதி அகலிப்பு பணிகளுக்காக உயரழுத்த மற்றும் தாழழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதாலும் புதிய உயரழுத்த மின் மார்க்கங்களை இணைக்க வேண்டியுள்ளதாலும் யாழில் ஒருசில இடங்களில் மின்விநியோகம் தடைப்படுமென யாழ்.பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் நாளை வெள்ளிக்கிழமை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரையும் பளை நகரம், கொடிகாமம் சந்தியிலிருந்து வரணி வரையான பிரதேசங்களில்  மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இப்பிரதேசங்களில்  மின்விநியோக மார்க்கங்களுக்கு இடையூறாகவுள்ள மரங்கள், மரக்கொப்புக்கள், தென்னை ஓலைகள், பனை ஓலைகள் என்பவற்றை வெட்டியகற்றி தடையற்ற மின்சார விநியோகத்தை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் மின்சார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .