2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

இந்திய இழுவைப்படகுகள் வாழ்க்கையை சீரழிக்கின்றன: கடற்றொழிலாளர் சம்மேளனம் குற்றச்சாட்டு

Kogilavani   / 2012 நவம்பர் 08 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
இந்திய இழுவைப்படகின் அத்துமீறிய செயற்பாட்டினால் வாழ்க்கையே சீரழிக்கப்படுவதாகவும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக  வடக்கு கரையோர மீனவ குடும்பங்கள் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்க சமாஜ தலைவர் எமிலியாம்பிள்ளை இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

தாம் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை தொடர்பில் கடற்றொழிலாளர் சம்மேளனத்திற்கு அறிவித்துள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

நெடுந்தீவு கடற்கரைப்பகுதியில் இருந்து சுண்டிக்குளம் கடற்கரை வரையான கரையோர கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளினால் வடபகுதி மீனவர்களின் வலைகள் அறுத்துச் செல்லப்படுகின்றன. இதனால், தமது தொழில் பாதிக்கப்படுவதாக மீனவ குடும்பங்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்திய இழுவைப்படகின் மூலம் பாதிக்கப்பட்ட வட பகுதி கரையோர மீனவ குடும்பங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் இந்திய தூதரகம் மற்றும்; யாழ்.அரச அதிபர் உட்பட நீரியல் வளத்துறை அதிகாரிகளுக்கும் கடிதங்கள் மூலம் முறையிட்டனர்.

இதுதொடர்பில் இந்திய தூதரக அதிகாரியிடம் பலமுறை மக்கள் சந்தித்து கலந்துரையாடிய போதிலும் இதுவரை காலமும் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படவில்லை.

இதனால் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  படகுகள், வலைகளுக்கு வங்கியில் பெற்ற கடன் தொகையினை மீளச் செலுத்த முடியாத சூழ்நிலையில், வங்கிகளினால் மீனவ குடும்பங்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு  முகம் கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு மீனவ குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்களின் இழுவைப் படகின் அத்துமீறிய செயற்பாட்டினை குறைப்பதற்கு எவரும் நடவடிக்கை எடுக்க முன்வராத காரணத்தினால், நெடுந்தீவு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கரையோர கடற்பகுதி எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கப்பபோவதாக கடற்றொழில் சம்மேள தலைவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .