2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

அதிபர் நியமனம் கிடைக்காதவர்கள் ஆசிரியர் சங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பணிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                (சுமித்தி)
வடமாகாணத்தில் அதிபர் நியமனம் கிடைக்காது பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்க யாழ். மாவட்ட செயலாளர் ஜெ.லெஸ்லி இன்று வெள்ளிக்கிமை அறிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் இருந்து இலங்கை அதிபர் நியமன நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய வகுப்பு I, II, III பரீட்சார்த்திகளுக்கு அதிபர் நியமனம் கிடைக்காதவர்கள் தமது விண்ணப்ப படிவத்தினை ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர், 65/3 சிற்றம்பலம் ஏ.ஹர்டினர் மாவத்தை கொழும்பு -2 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விண்ணப்பப் படிவங்கள் உடன் கிடைக்கக்கூடிய வகையில் கடிதம் மூலம் அல்லது 011- 2458058 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு அவர் கூறினார்.

வடமாகாணத்தில் 300இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கருதுகின்ற பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளை திரட்டி கல்வி அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதிக்காது விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ். மாவட்ட செயலாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .