2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கொடிகாமம் இராணுவ முகாம் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது

Super User   / 2012 நவம்பர் 20 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

கொடிகாமம், இராவில் இராணுவ முகாம் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என பாதுகாப்பு படை தலைமையகம் எழுத்து மூல அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தமிழ்மிர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கடந்த பல வருடமாக இராணுவத்தினர் முகாமிட்டிருந்த காணிகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னரும், மேலும் சில பகுதிகள் இன்னமும் கையளிக்கபடாத நிலையிலேயே இருந்தன.

தமது சொந்த காணிகளில் இராணுவத்தினர் முகாமிட்டு இருப்பதனால் எந்த விதமான வீட்டுத் திட்டங்களும் தமக்கு கிடைப்பதில்லை எனவும் தமது காணிகளை மீட்டுத் தருமாறு அக்காணிக்கு சொந்தமான 56 குடும்பங்கள் கடந்த மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில்  முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கையின் பயனாக தற்போது அப்பகுதி மக்களின் காணிகள் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் எதிர்வரும் 30ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .