2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

இராமாவில் இராணுவ முகாம் காணி பொதுமக்களிடம் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 21 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


கொடிகாமம், அல்லாரை, இராமாவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிரந்த காணி இன்று அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க இன்று மதியம் 3 மணியளவில் இந்தக் காணியை கையளித்தார்.

523ஆவது படைப்பிரிவின் தளபதி எம்.டபிள்யூ விஜயசூரியவின் ஏற்பாட்டில், ஜே - 320 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 45 குடும்பங்களுக்கு 30 ஏக்கர் நிலப்பரப்பு கையளிக்கப்பட்டது. இதன் போது, இப்பகுதியில் குடியேறவுள்ள மக்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தில் பதிவுகளை மேற்கொண்டு வீட்டுத்திட்டத்திற்கான வசதிகளை பெற்றுத் தருவதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தாம் எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, அப்பகுதி மக்கள் யுத்த காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளார்கள். இப்படியானவர்களுக்கு அவர்களின் சொந்த இடங்களை பெற்று அங்கு தமது வாழ்க்கையினை நடைமுறைப்படுத்தும் போது அவர்களுக்கு ஒரு சந்தோஷம் ஏற்படுகின்றதாகவும், அவற்றுடன் யுத்தத்தின் பின்பு இழந்தவற்றினைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்கள் என்றார்.

அதேவேளை, அரச காணியோ அல்லது நியாயமான விலைகளில் காணிகள் கிடைத்தால் அங்கு இராணுவ முகாம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும், எந்த உதவிகள் வேண்டுமென்றாலும் தாம் செய்வதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில், சாவகச்சேரி பிரதேச செயலர் திருமதி.சாந்தசீலன், 52 படைப்பிரிவின் தளபதி மேஜர் சுதர்சிங், 11ஆவது விஜயபாகு படைப்பிரிவின் தளபதி ஹேமரத்ன உட்பட இராணுவ அதிகாரிகள்,  மதகுருமார்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X