2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ரூபன்)

கடந்த சில நாட்களாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் நிகழ்ந்து வரும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். மாநகர சபையினால் நிதி உதவி வழங்குவதற்கான பிரேரணையை இன்று சபையில் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா முன்வைத்தார்.

இதனை ஏகமனதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இது இன்று நடைபெற்ற யாழ்.மாநாகர சபையின் மாதாந்தக்; கூட்டத்திலேயே மேற்படி பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய கிழக்குப் பகுதியில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும், வடக்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 இலட்சம் ரூபாயும் உதவி வழங்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X