2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.மாநகர சபையின் அபிவிருத்தி பணிகளில் வீழ்ச்சி: அ.பரஞ்சோதி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்ரூபன்)

2009ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான 4 ஆண்டுப் பகுதியில் யாழ்.மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் வீதம் கடந்த காலங்களைவிட குறைவாகவுள்ளதாக யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் அ.பரஞ்சோதி தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

மேலும் யாழ்.மாநகர சபைக்கு மக்களிடம் இருந்து ரூபா 140 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் இதுவரை 25 வீதமே அபிவிருத்திக்கு செலவிடப்பட்டுள்ளது. இது யாழ்.மாநகர சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி கிடைத்த புள்ளி விபரம் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .