2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

தேசிய தொழில் தகைமை சான்றிதழுக்கான முன்னோடி பரீட்சை

Kogilavani   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

முன்னறிவை இனங்கண்டு அங்கீகரித்தல் (RPL) முறையினூடாக தேசிய தொழில் தகைமை சான்றிதழ் (NVQ)   ஒன்றினை பெற்றுக் கொள்வதற்கான முன்னோடி பரீட்சைக்குரிய கலந்துரையாடல் காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நிலைய பொறுப்பதிகாரியும் மதிப்பீட்டாளருமான ஐ.எல்.எம்.இப்றாஹிம் தலைமையில் இடம்பெற்றது.

'தேசத்திற்கு மகுடம' தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகார சபையின் (நைட்டா) ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அம்பாறை மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகார சபையின் முகாமையாளர் ஏ.மசூர், போதானாசிரியர்களும் மதிப்பீட்டாளர்களுமான எம்.ஏ.மாஹிர், எஸ்.ஆனந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி திட்டத்தினை முன்னிட்டு நடாத்தப்படவுள்ள இச்சான்றிதழ் பரீட்சையில் தச்சுத்தொழிலாளர்களுக்கான (மர கைவினைஞர்) மதிப்பீட்டுப்  பரீட்சைக்கான செயலமர்வே இதன்போது இடம்பெற்றது.

இச்செயல்திட்டத்தினூடாக பல துறைகளிலும் அனுபவமுள்ள பலர் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலிருந்து இணைத்துகொள்ளப்படவுள்ளனர்.

இதில் மாவட்டத்திற்கு தலா 250  பயிலுனர்கள் வீதம் 1000 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .