2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

வெளி மாவட்டங்களுக்கான தனியார் பஸ் தரிப்பிடம் விரைவில் புனரமைப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 04 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
வெளிமாவட்டங்களுக்கான தனியார பஸ் தரிப்பிடம் விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட தனியார் பஸ் கம்பனிகளின் தலைவர் கெங்காதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"வெளி மாவட்டங்களுக்கான பஸ் தரிப்பிடம் யாழ்.புல்லுக்குளம் பகுதியில் தற்போது அமைந்துள்ளது.  வெள்ளப்பெருக்கு காரணமாக இவ்விடம் சேரும், சகதியுமாக காணப்படுவதால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

யாழ். அரச அதிபர், யாழ். மாநகர சபை முதல்வர் ஆகியோர் இணைந்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

இதன்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நிதியில் யாழ்.மாநகர சபையும் இணைந்து தனியார் பஸ் நிலையத்தை புனரமைப்பு செய்வதென தீர்மானித்துள்ளது.

புனரமைப்பு செய்வதற்கான உத்தேச மதிப்பீட்டினை கணிப்பிட்டு தருமாறு யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் யாழ்.மாநகர சபை பொறியிலாளரிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், உத்தேச மதிப்பீட்டினை கணிப்பிடுவதற்காக ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவாரத்தின் பின்பு வெளிமாவட்டங்களுக்கான பஸ் தரிப்பிட நிலையம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது" என அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .